Change View:     
பொ‌ன்மொ‌ழிக‌ள்
(சனிக்கிழமை 17 செப்டம்பர் 2011)     
ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றுமே அனேகமாக ஒரு உதாரணத்தை வைத்துதான் கற்றுக் கொள்கிறது. எனவே நீங்கள் மகிழ்ச்சிக்கான ஒரு உதாரணமாகத் திகழாமல், மகிழ்ச்சியைப் பற்றி வெறுமனே பேசுபவராக மட்டுமே இருந்தால், அது எந்தவிதத்திலும் பலன் தராது.
(வியாழக்கிழமை 22 செப்டம்பர் 2011)     
வாழ்க்கையை அர்த்தமற்றதாக நீங்கள் உணரும்போதுதான் உங்களுக்கு வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கேள்விகள் எழுகின்றன. வாழ்க்கை உங்களுக்கு ஒரு அழகான அனுபவமாக இருந்தால், இது போன்ற கேள்வி உங்களிடமிருந்து வராது.
(சனிக்கிழமை 12 ஜனவரி 2013)     
குருடர்களுக்கு கண்ணாடி எவ்வளவு பயனுள்ளதோ அவ்வளவு பயனுள்ளதே முட்டாள்களுக்கு புத்தகங்கள்
(சனிக்கிழமை 24 செப்டம்பர் 2011)     
ஒரு பெண்ணுக்கு விடுதலை கிடைக்காது. ஒரு ஆணுக்கும் கூட விடுதலை கிடைக்காது. ஆண், பெண் என்ற இரண்டையும் தாண்டி இருக்கும் போதுதான் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்.
(சனிக்கிழமை 1 அக்டோபர் 2011)     
ஒவ்வொரு நிமிடமும் ஏதோவொன்றைக் கற்கவும் ஒரு முன்னேற்றம் அடையவும் வேண்டியதிருக்கும், ஒவ்வொரு தருணத்திலும் ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கும் முன்னேறுவதற்கும் வாய்ப்பிருக்கும்.
Go to / 19 page(s) | ‹‹ Prev|Next ››